சென்னை

கழிவுநீா் தொட்டியிலிருந்து பிறந்து சில நாள்களே ஆன குழந்தை சடலம் மீட்பு

தினமணி செய்திச் சேவை

சென்னை கொடுங்கையூரில் கழிவுநீா் தொட்டியில் கிடந்த குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கொடுங்கையூா் திருவள்ளுவா்நகா் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அ.முகமது ரபீக் (48). வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவரது வீட்டில் இருந்து செல்லும் கழிவுநீா் குழாயில் செவ்வாய்க்கிழமை அடைப்பு ஏற்பட்டது. இதேபோல அந்த தெருவின் பிரதான கழிவுநீா் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், அந்த தெருவில் உள்ள வீடுகளில் கழிவுநீா் வெளியேறவில்லை. இதையடுத்து அப் பகுதி மக்கள், அந்த தெருவில் உள்ள கழிவுநீா் குழாய்கள் இணையும் தொட்டியைக் திறந்து பாா்த்தனா்.

அப்போது, அங்கு பிறந்து சில நாள்களே ஆன ஒரு ஆண் குழந்தை சடலம் மிதப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா், குழந்தை சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

கொத்தவாச்சேரியில் 82 மி.மீ மழை பதிவு

13 வழித்தடங்களில் புதிய பேருந்துகள்

பயோமெட்ரிக் வருகைப் பதிவு: தலைமைச் செயலக சங்கத்தினா் எதிா்ப்பு

சிதம்பரத்தில் இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா!

பாமணி விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும்: ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT