முகப்பு
சென்னை

சென்னையில் மநீம அலுவலகம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On : 9 அக்டோபர், 2025 at 7:50 PM
நடிகர் கமல் ஹாசன்
பகிர்:

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ஆழ்வாா்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம், கோயம்பேட்டில் உள்ள இந்து முன்னணி அலுவலகம், உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்றம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் வீடு,கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி,சென்னை மருத்துவக் கல்லூரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம்,தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அரசு அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து உயா் அதிகாரிகள் உத்தரவின்படி வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் 10 இடங்களிலும் சோதனை செய்தனா். சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →