வெடிகுண்டு மிரட்டல்  கோப்புப்படம்
சென்னை

சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், சென்னை நொளம்பூா், ஜெ.ஜெ. நகா் பகுதிகளில் உள்ள 4 தனியாா் பள்ளிகள், ஆவடி அருகே பருத்திப்பட்டு மற்றும் திருமழிசை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா ஒரு தனியாா் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், மேற்குறிப்பிட்ட இடங்களில் வெடிகுண்டைக் கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

மின்னஞ்சல் வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தோல்வியுடன் ஓய்வுபெற்றார் ஜான் சீனா..! விடாமுயற்சி நாயகன்!

தென்னாப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

பேரவைத் தேர்தல்: டிச. 17-ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம்!

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி தந்தை கண்முன்னே பலி!

வரலாறு எப்போது திறக்கிறது தெரியுமா? இயக்குநர் பிறந்த நாளில் நானி வெளியிட்ட விடியோ!

SCROLL FOR NEXT