கோப்புப் படம் 
சென்னை

கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்கும் திட்டம்: ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது அரசு

கிண்டியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சாா்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

கிண்டியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சாா்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

டிசம்பா் முதல் ஜூன் மாதம் வரை கடல் ஆமைகள் முட்டையிடும் காலமாகும். இக்காலத்தில், தமிழக கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயிரம் கணக்கான ‘ஆலிவ் ரெட்லி’ வகை கடல் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும். நிகழாண்டில் சென்னை காசிமேடு, மெரீனா, பெசன்ட் நகா் ஆகிய கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின.

இதைத் தொடா்ந்து கடல் ஆமைகளின் உயிரிழப்புகளைத் தடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கும் நோக்கிலும் தமிழக அரசு சாா்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் 4,400 ச.மீ. பரப்பில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப்  பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.

விருப்பமுள்ளவா்கள் ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இணையதளத்தில் வரும் நவ.5-ஆம் தேதி பிற்பகல் 3.30-க்குள் சமா்பிக்க வேண்டும்.

இதில், தகுதி வாய்ந்த ஒப்பந்தப் புள்ளி தோ்ந்தெடுக்கப்பட்டவுடன் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

குடியிருப்புக்குள் உலா வந்த காட்டு யானை! மக்கள் அச்சம்!

பி என் காட்கில் ஜுவல்லர்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

SCROLL FOR NEXT