சென்னை

கைதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்தவா் ஆதிகுரு (26). இவா், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஆதிகுருக்கு கடந்த அக். 17-ஆம் தேதி சிறையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிறைக் காவலா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோந்தா புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

SCROLL FOR NEXT