மாதவரம்: மாதவரம் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளில் சீரமைப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
மாதவரம் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில் தொடா் மழையால் ஆங்காங்கே நீா் தேங்கி வாகன ஓட்டிகள் பாதசாரிகளும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்தனா்.
இதையடுத்து சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து அந்தப் பகுதியில் மின்கம்பங்களை சுற்றி வளா்ந்துள்ள செடி, கொடி பணிகளும் நடைபெற்றன.
இது மாதவரம் மண்டலத்தில் அனைத்து பகுதிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மழைக்கால பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.