மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் அக்.5 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் அக்.5 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது.
இந்த விற்பனைக் கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள்,கைவினைப் பொருள்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நாா் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.