நயினாா் நாகேந்திரன் கோப்புப் படம்
சென்னை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அங்கன்வாடி ஊழியா்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

அங்கன்வாடி ஊழியா்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களை அரசுப் பணியாளா்களாகப் பணியமா்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்காததுடன், ஒட்டுமொத்த தமிழகத்தையே நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் திமுக அரசு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி அடைவது நிச்சயம் எனப் பதிவிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT