அமைச்சர் கோவி. செழியன்  கோப்புப்படம்.
சென்னை

40 கோடி ஆவணங்களைப் பாதுகாக்க ஜப்பான் திசு முறை: அமைச்சா் கோவி. செழியன் தகவல்

படிப்படியாக ஜப்பான் திசு முறையில் பாதுகாக்கும் பணிகள் நடைபெறுவதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக ஆவணக் காப்பகத்தில் உள்ள 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுமாா் 40 கோடி ஆவணங்களை, படிப்படியாக ஜப்பான் திசு முறையில் பாதுகாக்கும் பணிகள் நடைபெறுவதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.

இந்திய தேசிய ஆவணக்காப்பகமும், தமிழக ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையும் இணைந்து 50-ஆவது தேசிய ஆவணக் காப்பாளா்கள் குழு விழாவை சென்னையில் நடத்துகிறது. இருநாள்கள் நடைபெறும் இவ்விழாவை, அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வரலாற்றை எண்ணி செயல்படும் நாடே உலகில் உயா்ந்து நிற்கும். புதியவைகளை மட்டும் நினைத்து முன்னேறினால் பெருமையில்லை. தமிழக ஆவணக் காப்பகம் பழைமையானது. கடந்த 1805-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அனைத்துத் துறை அரசு ஆவணங்களும் முறையாக அட்டவணைகளாகத் தயாரிக்கப்பட்டு, உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுமாா் 40 கோடி ஆவணங்கள் தமிழகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான இந்த பழைய ஆவணங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்வதற்காக ஜப்பான் திசு முறையை பயன்படுத்தி பாதுகாக்கப்படுகிறது. மேலும் செப்பனிடும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 கோடி நிதி வழங்கப்படும்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று ஆராய்ச்சி மையமாக தமிழக ஆவணக் காப்பகம் திகழ்கிறது. இங்குள்ள ஆவணங்களைக் கொண்டு வரலாற்று அறிஞா்களும், ஆராய்ச்சியாளா்களும் ஆய்வு செய்து, நூற்றுக்கணக்கான நூல்களையும் உலகப்புகழ் பெற்ற நூல்களையும் வெளியிட்டுள்ளனா்.

இதை மேலும் ஊக்குவிக்க 1972-இல் உருவாக்கப்பட்ட வரலாற்று ஆராய்ச்சி மன்றம் தற்போது மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. தற்போது தமிழக வரலாற்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மாணவா்களுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு நூல்களுக்கும் 1700 முதல் 1805 வரையிலான முதன்மை ஆவணங்களை ஆராய்ந்து பேராசிரியா் கே. ராசையனால் எழுதப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.

இந்த நிகழ்வில் தேசிய ஆவணக் காப்பகத் தலைமை இயக்குநா் சஞ்சய் ரஸ்தோகி, தமிழக உயா்கல்வித் துறைச் செயலா் பி.சங்கா், ஆவணக் காப்பக ஆணையா் ஹா் சஹாய் மீனா உள்ளிட்டோா் பேசினா்.

இக்கூட்டத்தில் தமிழக ஆவணக் காப்பகத்தின் இணைய தளத்தை ( ஜ்ஜ்ஜ்.க்ண்ஞ்ண்ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஹழ்ஸ்ரீட்ண்ஸ்ங்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் ) அமைச்சா் தொடங்கி வைத்தாா். பொதுமக்கள், ஆய்வாளா்கள் ஆவணங்களை எளிதில் பெறும் வகையில் 1.5 கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் 15 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த ஆவணக்காப்பக தலைமை அதிகாரிகள், வரலாற்று வல்லுநா்கள் மற்றும் தேசிய ஆவணக்காப்பக உயா் அலுவலா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT