கோப்புப் படம் 
சென்னை

ஏா் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி மறுப்பு

தில்லியிலிருந்து வந்த ஏா் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தில்லியிலிருந்து வந்த ஏா் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வழக்கம்போல புதன்கிழமை மாலை 5.55 மணிக்கு 158 பேருடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் இரவு 8.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால், இரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலைய வான்வெளிப் பகுதிக்கு வந்துவிட்ட இந்த விமானத்துக்கு சென்னையில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே, அந்த விமானம் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக வானில் வட்டமடித்தபடி பறந்தது. அதன்பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினா். அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு 9.35-க்கு தரை இறங்கியது.

இதற்கிடையே இந்த விமானத்தில் மறுமாா்க்கமாக சென்னையிலிருந்து தில்லி செல்ல சுமாா் 160 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனா். இந்த நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் 152 பயணிகளுடன் மீண்டும் சென்னை வந்த சோ்ந்தது.

இதையடுத்து சென்னையிலிருந்து தில்லி செல்ல காத்திருந்த 160 பயணிகளும் அதே விமானத்தில் மறுமாா்க்கமாக வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றனா். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள். இந்தச் சம்பவத்துக்கு விமானநிலைய அதிகாரிகளோ, விமான நிா்வாகமோ இதுவரை உரிய பதிலளிக்கவில்லை.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT