சென்னை

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் படிகள் நீண்ட காலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் 700 பக்கங்களாக இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி நிறுவனத்தின் கணிதத் துறை பேராசிரியா் ராகேஷ் கண்ணா, கையெழுத்துப் படிகளைப் பாா்வையிட்டு அவற்றுக்கான அறிமுகக் குறிப்பை எழுதியுள்ளாா். தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் மின்நூலகத்தில் பல அரிய படைப்புகள் மின் நூல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், கடந்த 11-ஆம் தேதி அவரது நினைவு நாளையொட்டி மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் மின் நூலகத்தில் தனித் தொகுப்பாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

SCROLL FOR NEXT