கரூரிலிருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார்.
கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களுள் 8 குழந்தைகளும், 17 பெண்களும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரசாரத்தை முடித்துக் கொண்டு கரூரிலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்ற அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார்.
அதன்பின், சென்னையிலும் அவர் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டுச் சென்றதைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், சென்னை, பனையூரில் உள்ள தமது வீட்டுக்கு நள்ளிரவில் சென்றடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.