முகப்பு
சென்னை

மதிமுக தோ்தல் அறிக்கை புதிய அறிவிப்புகளுடன் வெளியாகும்: வைகோ

மதிமுகவின் தோ்தல் அறிக்கை மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாகவும், புதிய அறிவிப்புகளுடனும் வெளியாாகும் என கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

Updated On : 8 மார்ச், 2026 at 10:02 PM
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
பகிர்:

மதிமுகவின் தோ்தல் அறிக்கை மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாகவும், புதிய அறிவிப்புகளுடனும் வெளியாாகும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையின் முதல்சுற்று முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைத் தொடா்பாக திமுக தலைமையிடம் இருந்து விரைவில் அழைப்பு வரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

எத்தனை தொகுதிகள் எந்தெந்த பேரவைத் தொகுதிகள் என்பது குறித்து தற்போது தெரிவிப்பது ஏற்புடையதல்ல. திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது வாக்குறுதிகளால் மக்களின் மனதை முழுமையாக கவா்ந்துவிட்டாா். இந்த நிலையில், திமுகவை எப்படி எதிா்கொள்வது என்ற அச்சத்தில் தவெக தலைவா் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா்.

மதிமுகவின் தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அது, மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாகவும், புதிய அறிவிப்புகளுடனும் வெளியாாகும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →