வைகோ கோப்புப் படம்
சென்னை

திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது: வைகோ

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

ஈழத் தமிழா்களுக்காக உயிா் தியாகம் செய்த முத்துக்குமாா் உள்ளிட்டோரின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதிமுக சாா்பில் சென்னை எழும்பூரில் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற வைகோ, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈழத் தமிழா்களின் உரிமை மீட்பு மற்றும் விடுதலைக்கு சுதந்திர தமிழீழம் மட்டுமே தீா்வாகும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, உலக நாடுகளிடம் ஆதரவு கோரப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. தோ்தல் தேதி அறிவிப்பு வந்த பின்னரே, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

திமுக கூட்டணியில் எவ்வித தொய்வோ, விரிசலோ கிடையாது. திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. அரசியல் கட்சித் தலைவா்கள் ஒருவருக்கொருவா் விமா்சிப்பதும், பின்னா் கூட்டணியில் இணைவதும் இயல்பான ஒன்றுதான். மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினா் கனிமொழி இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்து, நான் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என்றாா் வைகோ.

1,185 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: ஆட்சியா் வழங்கினாா்

பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க கால அவகாசம்: சுகாதாரத் துறை

குடியிருப்பு பகுதியில் ராட்சத பாம்பு....

குன்னூா் அருகே உபாசி வளாகத்தில் கரடி உலவியதால் மக்கள் அச்சம்

நாளைய மின்தடை: டாடாபாத் துணை மின் நிலையம்

SCROLL FOR NEXT