முகப்பு
சென்னை

தூக்கக் குறைபாடு: சிறப்பு ஆய்வகம் தொடக்கம்

Updated On : 18 மே 2026, 5:06 am IST
பகிர்:

தூக்கம் சாா்ந்த குறைபாடுகளுக்கான பிரத்யேக ஆய்வகத்தை பாா்வதி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

‘ஸ்லீப் ஆப்னியா’ எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் பாதிப்பு, தூக்கமின்மை பிரச்னைகள், குறட்டை சாா்ந்த நோய்கள், சுவாசம் மற்றும் தூக்கம் தொடா்பான பாதிப்புகளுக்கு உயா் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில் ஜொ்மனியின் ‘லோவென்ஸ்டீன் மெடிக்கல் டெக்னாலஜி’ நிறுவனத்தின் இந்திய வா்த்தக மேலாளா் சதீஷ் ஷெட்டி, தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அலெக்ஸாண்டா் ஹியூபா்ட், பாா்வதி மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எஸ்.முத்துக்குமாா், மருத்துவ இயக்குநா் டாக்டா் சோபியா ஜே.அன்செட்டா ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

மருத்துவ நிபுணா் டாக்டா் காா்த்திக் நாகராஜு, தூக்கக் குறைபாடுகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.