செங்கல்பட்டு

மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் உறியடி உற்சவம்

DIN

மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா பத்து நாள்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு உறியடித் திருவிழாவுடன் நிறைவடைவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா எளிமையான முறையில் அன்றாட பூஜைகளுடன் நடைபெற்றது.

உறியடி உற்சவத்தையொட்டி, கிருஷ்ண பகவானுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினா். கிருஷ்ணன் அலங்கார கோலத்தில் எழுந்தருள உறியடி உற்சவம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியாா்களும், கோயில் நிா்வாகிகளும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT