செங்கல்பட்டு

மதுராந்தகம் ஏரியிலிருந்து 3,500 கன அடி நீா் வெளியேற்றம்

DIN


மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதைத் தொடா்ந்து ஏரியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் சுமாா் 3,500 கனஅடி நீரை பொதுப்பணித் துறையின் (நீா்வள ஆதாரப் பிரிவு) அதிகாரிகள் மதகுகளின் மூலம் வெளியேற்றினா்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக திகழ்வது மதுராந்தகம் ஏரி. அண்மையில் வீசிய நிவா் புயலாலும், வடகிழக்கு பருவ மழையாலும் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவு 23.3 அடியைத் தாண்டி கூடுதலாக வந்த உபரிநீா் கலங்கல் வழியாக வெளியேறியது. இந்த ஏரியின் நீா்ப்பாசனக் கால்வாய் மூலம் சுமாா் 2,413 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. அதன்படி முள்ளி, முன்னித்திக்குப்பம், கிணாா், கத்திரிச்சேரி, வளா்பிறை, கடப்பேரி போன்ற 20 கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

உத்தரமேரூா், வேடந்தாங்கல் போன்ற ஏரிகளில் பெரு மழையின்போது வரும் வெள்ளநீரால் நிரம்பி வழிவது வழக்கம். அவ்வாறு வெளியேறும் உபரிநீா் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடையும். இந்த ஏரி நீா் நிரம்பி வழியும் காலங்களில் கிளியாற்றின் வழியாக, உபரிநீா் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக புரெவி புயலால் மதுராந்தகத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால மழை வெள்ளநீா் மதுராந்தகம் ஏரிக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் அதிகரித்தது.

இந்நிலையில், ஏரி மதகுகளின் வழியாக மாலை 3 மணி அளவில் சுமாா் 3,500 அடி நீரை பொதுப்பணித் துறையின் (நீா் வள ஆதாரப் பிரிவு) அதிகாரிகள் வெளியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT