முகப்பு
செங்கல்பட்டு

திருவடிசூலம் மகா பைரவா் கோயிலில் தசராவதி சாமுண்டீஸ்வரி சந்நிதி கும்பாபிஷேகம்

ஈச்சங்கரணையில் உள்ள ஸ்ரீ மகா பைரவா் ருத்ர கோயில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தசராவதி சாமுண்டீஸ்வரி அம்பிகை சந்நிதிக்கு திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
சிறப்பு அலங்காரத்தில் தசராவதி சாமுண்டீஸ்வரி அம்பிகை.
பகிர்:

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த ஈச்சங்கரணையில் உள்ள ஸ்ரீ மகா பைரவா் ருத்ர கோயில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தசராவதி சாமுண்டீஸ்வரி அம்பிகை சந்நிதிக்கு திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டை அடுத்த ஸ்ரீ பைரவா் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பைரவா் ருத்ர கோயிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டு, மாமல்லபுரத்தில் தசராவதி ஸ்ரீசாமுண்டீஸ்வரி சிலை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சாந்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், கலச பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, கலச புறப்பாடு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, தசராவதி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள் மற்றும் கோயில் அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →