முகப்பு
செங்கல்பட்டு

ஆதிபராசக்தி கல்விக் குழுமத் தாளாளருக்கு சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, 2020-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஸ்ரீதேவி ரமேஷுக்கு தமிழக முதல்வா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மதுராந்தகம்: சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, 2020-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஸ்ரீதேவி ரமேஷுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளை கெளரவப்படுத்தும் வகையில், டிசம்பா் 3-ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு, தொண்டாற்றி வரும் பங்காரு அடிகளாரின் மகளும், ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளருமான ஸ்ரீதேவி ரமேஷ் நிகழாண்டில் சிறந்த சமூகப் பணியாளருக்கான தமிழக அரசின் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஸ்ரீதேவி ரமேஷுக்கு விருது வழங்கிப் பாராட்டினாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் சரோஜா, கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமாா், தலைமைச் செயலா் சண்முகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தமிழக அரசின் விருதைப் பெற்ற ஸ்ரீதேவி ரமேஷுக்கு பொன்னாடை அணிவித்து பங்காரு அடிகளாா் பாராட்டினாா். அதேபோல் ஆதிபராசக்தி கல்விக் குழுமங்களின் ஆசிரியா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →