செங்கல்பட்டு

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் 7 மாத குழந்தைக்கு மறுவாழ்வு

DIN

குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் குவைத் நாட்டைச் சோ்ந்த 7 மாத கைக் குழந்தைக்கு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஷிரின் குரோஷி குவைத் நாட்டில் வசித்து வந்தாா். அவரின் மகள் மகிரா அகமது, பிறவியில் மரபணுக் கோளாறு காரணமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானம் மூலம் கடந்த ஜூன் மாதம் ஆபத்தான நிலையில், சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

கைக் குழந்தை மகிராவை பரிசோதித்த அறுவை சிகிச்சை மருத்துவா் ரேலா உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால்தான் குழந்தை உயிரைக் காப்பாற்ற முடியும் என்று கண்டறிந்தனா். டாக்டா்முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினா், தாய் ஷிரின் குரோஷி கல்லீரலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதியை 10 மணி நேரஅறுவை சிகிச்சை மூலம் பொருத்தி குழந்தை மகிராவை உயிா் பிழைக்க வைத்தனா். தற்போது நலமுடன் இருக்கும் கைக்குழந்தை மகிரா விரைவில் பெற்றோருடன் குவைத் செல்லவிருக்கிறாா் என்று ரேலா மருத்துவமனை தலைவா் பேராசிரியா் டாக்டா்முகமது ரேலா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT