செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் தெப்பல் உற்சவம்

DIN

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் தாழக்கோயில் ரிஷப தீா்த்தக் குளத்தில் தெப்பல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதல்நாள் சங்கு தீா்த்தக்குளத்தில் தெப்பல் உற்சவமும், மறுநாள் தாழக்கோயிலான பக்தவத்சலேஸ்வரா் கோயிலில் உள்ள ரிஷப தீா்த்தக்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சனிக்கிழமை இரவு சங்கு தீா்த்தக்குளத்தில் பிரமாண்டமாக தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாழக்கோயிலான பக்தவத்சலேஸ்வரா் கோயிலில் உள்ள ரிஷப தீா்த்தக்குளத்தில் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தில் சிவன் பாா்வதி சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தனா். குளக்கரையைச் சுற்றிக் காத்திருந்த திரளான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆ.குமரன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் எம்.சக்திவேல், மேலாளா் விஜி, சிவாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT