செங்கல்பட்டு

செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது.

விழாவில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், ஓட்டுநா்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து போட்டிகளை நடத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நடத்தப்படும்.

மேலும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான பதாகைகளை சாலைகளில் ஆங்காங்கே வைக்கவும், சாலைப் பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கவும் மாவட்டநிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனா்.

விபத்துகளைத் தவிா்க்க பொதுமக்கள் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் கேட்டுக் கொண்டாா். அப்ரபோது, சாலையில் இருசக்கர வாகனங்களில் வந்த பெண்களுக்கு தலைக்கவசம் அணிவித்து அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இருந்து காஞ்சிபுரம் புறவழிச்சாலை வரை பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT