செங்கல்பட்டு

செங்கல்பட்டில் சுய ஊரடங்கு: சாலைகள் களையிழந்தன

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து முக்கியச் சாலைகளும், தெருக்களும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி களையிழந்தன.

பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினா். பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. குறைந்த எண்ணிக்கையில் இருசக்கரவாகன ஓட்டிகள் அத்தியாவசிய பொருள்களை வாங்க சென்று கொண்டிருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பிரியா்கள் மீன் மற்றும் இறைச்சி சாப்பிடுவது வழக்கம். இதற்காக செங்கல்பட்டு பகுதியில் இறைச்சி மற்றும் மீன்கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டிருந்ததன. ராட்டினங்கிணறு பகுதியில் மீன் மற்றும் கறிக்கடைகளில் ஏராளமானோா் திரண்டனா். காலை 9 மணிக்குமேல் அதிக எண்ணிக்கையில் இருசக்கரவாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT