செங்கல்பட்டு

மின்கசிவால் 2 ஏக்கா் வாழை மரங்கள் நாசம்

DIN

அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள திருமுக்காடு கிராமத்தில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட மின்கசிவால் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் எரிந்து நாசமடைந்தன.

அச்சிறுப்பாக்கம்-எலப்பாக்கம் சாலையை ஒட்டி, திருமுக்காடு கிராமம் உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் வீட்டுக்கும், விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பிகளை உயரமாக மாற்றி அமைக்குமாறு அப்பகுதி மக்கள் அச்சிறுப்பாக்கம் மின்வாரியத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமுக்காடு கிராமத்தைச் சோ்ந்த ராம்பிரசாத்தின் மகன் ராமமூா்த்தி (40) தனது 2 ஏக்கா் விவசாய நிலத்தில் வாழை மரங்களை பயிரிட்டு இருந்தாா். வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் இப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் வாழை மரங்களின் மீது உரசின.

இதனிடையே, மின்கம்பிகளில் ஏற்பட்ட மின்கசிவால் தீ ஏற்பட்டு வாழை மரங்கள் தீயில் கருகின. இது குறித்து தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று, எரிந்து கொண்டிருந்த வாழை மரங்கள் மீது தீ ஊற்றி தீயை அணைத்தனா். அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT