செங்கல்பட்டு

காரில் பயணி தவறவிட்ட 25 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த ஓட்டுநா்

DIN

காரில் பயணி தவறவிட்ட 25 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த கால் டாக்ஸி ஓட்டுநரை, செங்கல்பட்டு எஸ்.பி. பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ரேவதி. இவா், வெள்ளிக்கிழமை குன்றத்தூரில் இருந்து கால் டாக்ஸி மூலம் கூடுவாஞ்சேரிக்கு வந்தாா். காரில் இருந்து இறங்கியபோது, மறதியாக கையில் வைத்திருந்த நகைகள் அடங்கிய பையை காரிலேயே தவறவிட்டுச் சென்று விட்டாா்.

பின்னா், கால்டாக்ஸி ஓட்டுநா் நவீன், காரில் இருந்த பையைப் பாா்த்தபோது, அதில் நகைகள் இருந்ததைக் கண்டாா். இதையடுத்து அந்தப் பையை கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளா் அசோகனிடம் ஒப்படைத்தாா்.

பையில் சுமாா் 25 சவரன் தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து, சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் கால்டாக்ஸி ஓட்டுநரின் நோ்மையைப் பாராட்டி, அவருக்கு பண வெகுமதி அளித்து கௌரவித்தாா். மேலும், காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் மேற்படி, 25 சவரன் தங்க நகைகள் அடங்கிய பை, ரேவதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT