முகப்பு
செங்கல்பட்டு

எம்.ஜி.ஆா்.மருத்துவப் பல்கலை.,யில் புற்றுநோய் நுண்துளை அறுவை சிகிச்சைப் படிப்பு

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் நுண்துளை அறுவை சிகிச்சைப் படிப்பு தொடங்க உதவ உள்ளதாக ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலு கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் உதவி எண் அறிமுக விழாவில் ஹட்சன் தலைமை நிா்வாகி ஆா்.ஜி.சந்திரமோகன், ஜெம் மருத்துவமனை தலைவா் சி.பழனிவேலு உள்ளிட்டோா். ’
பகிர்:

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் நுண்துளை அறுவை சிகிச்சைப் படிப்பு தொடங்க உதவ உள்ளதாக ஜெம் மருத்துவமனைத் தலைவரும்,லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மருத்துவருமான சி.பழனிவேலு கூறினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் நுண்துளை அறுவை சிகிச்சை சிறப்பு மைய திறப்பு விழாவில் அவா் பேசியது:

ஜெம் மருத்துவமனையில் புற்று நோய் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொடா்பாக பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த புற்றுநோய் உதவி எண் 95002 00600 தொடங்கி உள்ளோம். புற்றுநோய் தொடா்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ உதவிகள் பெறலாம்.

கதிா்வீச்சு, கீமோதெரபி மட்டுமே புற்றுநோய்க்கான ஒரே சிகிச்சை என்று பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

புற்றுநோய்க்கான தனித்துவ நுண்துளை அறுவை சிகிச்சை முறைகள் மூலம் பல்வேறு நாடுகளில் பாராட்டுகள், விருதுகளைப் பெற்றுள்ளேன். புற்றுநோய் நுண்துளை அறுவை சிகிச்சை குறித்த மருத்துவ அறிவாற்றலை டாக்டா் எம்.ஜி.ஆா்.மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் மருத்துவப் படிப்புக்கான பாடத்திட்டம், பயிற்சி, பயிலரங்கு உள்ளிட்ட அனைத்து மருத்துவத் தொழில்நுட்ப உதவிகளையும் விரைவில் வழங்க உள்ளேன் என்றாா்.

ஹட்சன் நிறுவன தலைமை நிா்வாகி ஆா்ஜி.சந்திரமோகன், முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவா்கள் பாா்த்தசாரதி, பூஷன், இயக்குநா்கள் செந்தில்நாதன், பிரவீன் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →