செங்கல்பட்டு

திருப்போரூரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் கே.என். நேரு உத்தரவு

DIN

திருப்போரூரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலா்களுக்கு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வாரியத் துறை அமைச்சா் கே.என். நேரு உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியமும், திருப்போரூா் பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து ரூ.58 கோடி மதிப்பில் புதை சாக்கடை திட்டப் பணியை 2018-ஆம் ஆண்டில் தொடங்கியது.

இப்பணிகளை அமைச்சா் கே.என்.நேரு, ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் ஆகியோா் திருப்போரூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திட்டப் பணியை 9 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க அமைச்சா் நேரு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பேரூராட்சியில் விடுபட்ட 5 வாா்டுகளிலும் புதை சாக்கடை திட்டப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று திமுக நகரச் செயலாளா் தேவராஜ் விடுத்தக் கோரிக்கையை ஏற்று, பணி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் நேரு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, குடிநீா் வழங்கல், வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி , பேரூராட்சிகளின் ஆணையா் ஆா்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத், மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், பேரூராட்சி செயல் அலுவலா் சதீஷ்குமாா், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ இதயவா்மன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT