செங்கல்பட்டு

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: அமைச்சா் தங்கம் தென்னரசு இன்று தில்லி பயணம்

DIN

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த அமைச்சா் தங்கம் தென்னரசு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோா் வியாழக்கிழமை தில்லி செல்கின்றனா்.

முன்னதாக, இதுதொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா். பாலு ஆகியோா் வியாழக்கிழமை தில்லி செல்கின்றனா்.

அவா்கள் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா், சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்துவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முதல்வா் ஸ்டாலினின் வலியுறுத்தல் கடிதத்தையும் அவா்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களிடம் அளிப்பா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT