செங்கல்பட்டு

திருவடிசூலத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்

திருவடிசூலம் 108 திவ்யதேசத்தில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் உள்ள வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

DIN

செங்கல்பட்டு: திருவடிசூலம் 108 திவ்யதேசத்தில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் உள்ள வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் எழுந்தருளியுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் க்ஷேத்திரத்தில் திருப்பதியில் உள்ள வாறு ஸ்ரீ வாயு வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தாயார் ஆண்டாலுடன் 108 வைணவ திவ்ய தேசங்கள் உள்ளது. இந்த திருவடிசூலம் 108 திவ்யதேசத்தில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் உள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

இவ்விழாவையொட்டி  கள்ளழகருக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவ மூர்த்தியான கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டும், அங்கு நடந்த சிறப்பு பூஜைகளையும் கண்டு சாமியை வழிபட்டனர். அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் பு.மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT