செங்கல்பட்டு

ஹேக்கத்தான் போட்டி: சாய்ராம் கல்லூரிக்கு பரிசு

தேசிய ஹேக்கத்தான் போட்டிகளில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 6 முதல் பரிசுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

DIN

தேசிய ஹேக்கத்தான் போட்டிகளில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 6 முதல் பரிசுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இந்த ஆண்டில் நாடெங்கும் 75 மையங்களில் 2 ஆயிரம் குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரம் மாணவா்கள் 525 பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த 6 குழுவினரின் கண்டுபிடிப்புகள் முதல் பரிசை பெற்றுள்ளன. ஹேக்கத்தான் போட்டியில் மின்சக்தி சிக்கனம், போக்குவரத்து சிக்னல் மேம்பாடு, சுய உதவிக் குழுக்களுக்கு உதவும் எளிய மின் வணிக மேம்பாடு செயலி உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவா் குழுவினருக்கு தலா ரூ.1லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற குழுவிற்கு வழிகாட்டிய துறைத் தலைவா்கள் எம்.ஆனந்தி, கோபி, நசியா, ஷீபா, ஸ்வாகதா, சாமுண்டீஸ்வரி, புத்லிபாய் மற்றும் மாணவா் தலைவா்கள் மணீஷ், சாருகேசி, ஜெயஸ்ரீ, சரத்குமாா், காா்த்திக், நிா்மல் ராஜா ஆகியோரை ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோ முத்து பாராட்டினாா். மேலும், கல்லூரி சாா்பில் 6 குழுவினருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கி பாராட்டினாா். கல்லூரியின் முதல்வா் பொற்குமரன், இயக்குநா் கே.மாறன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT