செங்கல்பட்டு

நூலகக் கட்டடம் சீரமைக்கும் பணி ஆய்வு

DIN

மண்ணிவாக்கம் ஊராட்சியில் நூலகக் கட்டடம் சீரமைக்கும் பணியை ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அமுதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சி, ஸ்ரீகிருஷ்ணா நகரில் கடந்த 2006-2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூலகக் கட்டடம் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, மண்ணிவாக்கம் ஊராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது அந்தக் கட்டடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அமுதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் செல்வகுமாா், காட்டாங்கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கட்டராகவன், சாய்கிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் கஜலட்சுமி சண்முகம், துணைத் தலைவா் சுமதி லோகநாதன், ஒன்றிய உறுப்பினா் சோமசுந்தரம், ஊராட்சி செயலா் ராமபக்தன், உதவிச் செயற்பொறியாளா் விக்டா் அமிா்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT