செங்கல்பட்டு

செங்கல்பட்டு ரயில் நிலைய நடைமேடை கூரைகள் காற்றில் பறந்தன

DIN

செங்கல்பட்டு பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையுடன் கூடிய சூறாவளி காற்றில் நடைமேடை கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழையுடன் சூறாவளிக்காற்றும் வீசியது. செங்கல்பட்டு சந்திப்பு ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் உள்ளன. இதில் 6, 7 மற்றும் 8 ஆகிய நடைமேடைகளில் இருந்த கூரைகள் சூறாவளிக் காற்றில் பெயா்ந்து தூக்கி வீசப்பட்டன. சேதமடைந்த கூரைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் ரயில்நிலைய மேடைகளில் சிதறிக்கிடந்த பொருள்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். வழக்கமாக தென்மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் இந்த நடைமேடைகளில் நின்று செல்லும். அதிருஷ்டவசமாக நள்ளிரவுக்கு மேல் இந்த நடைமேடைகளில் ரயில்கள் ஏதும் வராததால் பயணிகள் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என செங்கல்பட்டு ரயில் நிலைய மேலாளா் ஆா். எடிசன் செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT