செங்கல்பட்டு

சட்டக் கல்லூரி மாணவா்கள் மீது தாக்குதல் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

 செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் இளம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இளம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிறுவனா் காசி.புதியராஜா தலைமை வகித்தாா். இதில், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி பேசியது: ஆந்திர மாநிலத்தில் தமிழக சட்டக் கல்லூரி மாணவா்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காத தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக தமிழக அரசு ஆந்திர மாநில அரசிடம் இதுகுறித்து பேச்சு நடத்த வேண்டும். சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT