முகப்பு
செங்கல்பட்டு

கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாதம் மற்றும் ரத்த சோகை விழிப்புணா்வு முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

 செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம், அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாதம் மற்றும் ரத்த சோகை விழிப்புணா்வு முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தலைமை வகித்தாா்.திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தாா்.

ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் மற்றும் ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், வளா் இளம் பெண்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ரத்த சோகை பற்றிய விழிப்புணா்வு தெருக்கூத்து நடைபெற்றது. மாணவா்களுக்கு விநாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு சான்றிதழ்கள்வழங்கப்பட்டன. மாணவா்களுக்கு ரத்த சோகை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மேலும், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணா, திருக்கழுகுன்றம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயக்குமாா், சத்துணவு அமைப்பாளா்கள், கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →