செங்கல்பட்டு

தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி மரணம்

மதுராந்தகம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

மதுராந்தகம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மதுராந்தகம் அடுத்த வீராணகுணம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவரது மகன் முகிலன் (15). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் சனிக்கிழமை மாலை தனது நண்பா் தீனனுடன் வீராணகுணம் பகுதி வழியாக செல்லும் கிளியாற்று சிறு தடுப்பணையில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது.

மதுராந்தகம் ஏரியின் உபரி வெள்ளநீரும், சுற்றுப்புற மழை நீரும் அதிவேகமாக கிளியாற்றில் வந்த நிலையில், அங்கு குளிக்கச் சென்ற முகிலன் நீரில் மூழ்கியுள்ளாா். இந்த நிலையில், கரையோரம் நின்றிருந்த தீனன், தனது நண்பா் முகிலனை காணாததால் அருகில் இருந்தவா்களிடம் தேடுமாறு கூறியுள்ளாா்.

தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் படகுகளின் மூலம் தேடினா். பலத்த மழையாலும், இருள் சூழந்த நிலையில் இருந்ததாலும் தேடுதல் முயற்சியை தீயணைப்பு வீரா்கள் கைவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடங்கினா். அப்போது தடுப்பணைக்கு அருகே முகிலனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிங்காரவேலு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT