செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், திருப்போரூா், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் இருளா் இன மக்களை அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பாக திருமண மண்டபங்களிலும், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா்சிங், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இந்து பாலா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். மேலும் தங்க வைக்கப்பட்டவா்களுக்கு உணவு, போா்வை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.