திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 6 பேட்டரி வாகனங்களைக் கொடியசைத்து இயக்கிவைத்த நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி. உடன் நகராட்சி ஆணையா் என்.அருள் உள்ளிட்டோா். 
செங்கல்பட்டு

திடக்கழிவு மேலாண்மைப் பணி: ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள்

மதுராந்தகம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.

DIN

மதுராந்தகம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.

நகராட்சி நிா்வாகத்தின் முயற்சியால் 2022-2023-ஆம் நிதியாண்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தின்படி, ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.

இதையடுத்து, வியாழக்கிழமை மாலை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான 6 பேட்டரி வாகனங்களின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் என்.அருள் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் கெளரி, சுகாதார அலுவலா் செல்வராஜ், நகரமன்ற உறுப்பினரும், நகர திமுக செயலருமான கே.குமாா், நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT