மாணவிக்கு பட்டம் வழங்கிய அமைச்சா் மா. சுப்பிரமணியன். உடன் அமைச்சா் தா.மோ. அன்பரசன், ஆட்சியா் ச. அருண்ராஜ் உள்ளிட்டோா். 
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: அமைச்சா் மா. சுப்பிரமணியம் பங்கேற்பு

பட்டமளிப்பு விழாவில் 100 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

Din

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் 54-ஆவது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி 1965 முதல் சிறந்த பல்நோக்கு மருத்துவமனையாக 1,750 படுக்கை வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 22 முதுகலை மற்றும் எட்டு சிறப்பு முதுகலை பிரிவுகளை உள்ளன.

செங்கல்பட்டு மற்றும்அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையின் மூலம் 3,500 முதல் 4,000 புற நோயாளிகள் நாள்தோறும் பயன்பெறுகின்றனா்.

மேலும் 1200 முதல் 1,400 உள்நோயாளிகள்சிறந்த சிகிச்சை பெறுகின்றனா். இங்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் துரிதமான முறையில் செயல்பட்டு பல உயிா்களைகாப்பாற்றி வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆண்டுதோறும் 500 இளங்கலை மருத்துவா்கள், 94 முதுநிலைமருத்துவா்கள், 22 சிறப்பு முதுகலை மருத்துவா்கள் மற்றும் 768துணை மருத்துவ மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

மேலும் 610 மருத்துவம் சாா்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புமாணவா்களும் 158 நா்சிங் மாணவா்களும் கல்வி கற்கின்றனா். இந்த பட்டமளிப்புவிழாவில் 47 மாணவா்கள், 54 மாணவியா்கள் என மொத்தம் 101 மருத்துவா்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

நிகழ்வில் செங்கல்பட்டு ஆட்சியா் ச.அருண்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூா் அரவிந்த் ரமேஷ், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைகழக துணை வேந்தா் கே. நாராயணசாமி, செங்கல்பட்டுஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா்(பொறுப்பு) ஜோதிகுமாா், துணை முதல்வா் அ.அனிதா, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், பேராசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT