வேலைவாய்ப்பு முகாம்(கோப்புப்படம்) 
செங்கல்பட்டு

18-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்டமுன்னனி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5000 காலியிடங்களை நிரப்ப தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபா்களை, நோ்முகத்தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளனா். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்துகொள்ளலாம். 8-ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுநா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள், மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலானபுகைப்படத்துடன் 18.10.2024 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணி முதல் 2.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்டஆட்சியா் அலுவலகம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-2742 6020 மற்றும் 63834 60933 /88388 93259 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT