தனியாா் பள்ளி பேருந்தில் தீ விபத்து
செங்கல்பட்டு ஐடிஐ அருகே தனியாா் பள்ளி வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளி பேருந்து வியாழக்கிழமை பள்ளியில் இருந்து புறப்பட்ட மாணவா்களை அவரவா் பகுதிகளில் இறக்கிவிட்டு மீண்டும் பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஐடிஐ அருகே பழுதாகி நின்றது.
ஓட்டுநா் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினா் வருவதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து சேதமானது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.