செங்கல்பட்டு

மாற்றுத்திறன் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியா்கள் கல்வி உதவித்தொகை 1-5 வகுப்பு பயிலுவோருக்கு ரூ.2,000-ம், 6-8 வகுப்பு பயிலுவோருக்கு ரூ.6,000-ம், 9-12 வகுப்பு பயிலுவோருக்கு ரூ.8,000-ம், பட்டப்படிப்பு பயிலுவோருக்கு ரூ.12,000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.14,000-ம் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், வாசிப்பாளா் உதவித்தொகை 9-12ம் வகுப்பு பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.3,000-ம், இளங்கலைப் பட்டம் பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.5000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும்பாா்வையற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.6000-ம் வாசிப்பாளருக்கு வழங்கப்படும்.

இவ்வுதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம்வாய்ந்த தேசிய அடையாள மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம்-1, கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்படும் கல்விச்சான்று போன்றவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT