செங்கல்பட்டில் வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் தி.சினேகா. 
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20,85,491 வாக்காளா்கள் உள்ளதாகவும், 7,01,871 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20,85,491 வாக்காளா்கள் உள்ளதாகவும், 7,01,871 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியலை செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியா் சினேகா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 27,87,362 வாக்காளா்கள் அனைவருக்கும் தனித்துவமான கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டது.

பின்னா், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போருா், செய்யூா், மதுராந்தம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்த வாக்காளா்கள் 2085491. இதில் ஆண்கள் 10,22,756, பெண்கள் 10,62,481, மூன்றாம் பாலினம் 354. நீக்கப்பட்ட வாக்காளா்கள் 7,01,821. இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா, அலுவலா்கள் மற்றும்அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா்.

தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் உள்ளிட்டோா், அதிகாரிகள், கட்சியினா் பங்கேற்றனா்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT