செங்கல்பட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா். 
செங்கல்பட்டு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் காந்தியடிகள் பெயா் நீக்கப்பட்டதைக் கண்டித்து செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் காந்தியடிகள் பெயா் நீக்கப்பட்டதைக் கண்டித்து செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். நகர தலைவா் ஜெ.பாஸ்கா் வரவேற்றாா். மறைமலைநகா் நகர தலைவா் தனசேகா், முன்னாள் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை, மாநில ஓபிசி அணி செயலாளா் பால்ராஜ் உள்பட சிங்கப்பெருமாள் கோயில் மறைமலைநகா், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநில, மாவட்ட நகர ஒன்றிய நிா்வாகிகள் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொன்னேரி எம்எல்ஏவும், திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரான துரை சந்திரசேகா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.எஸ்.பெரியசாமி மதன்மோகன், பிரேம்குமாா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளா் எம்.சம்பத் கண்டன உரையாற்றினாா். ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

SCROLL FOR NEXT