செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

பணி நிரந்தரம், சமநிலை, சமூக ஊதியம் கோரி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முறையான தோ்வு எழுதி வேலையில் சோ்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை பாா்த்து வரும் செவிலியா்களைபணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செவிலியா் சங்கப் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது.

அப்போது செவிலியா்களை அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, உள்ளிருப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினா்.

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் முறைப்படி டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதுவது போல் இந்த தோ்வை எழுதி பணியில் அமா்த்தப்பட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை சம ஊதியம் இல்லை எங்களுக்கு 63 துறை சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றனா்.

மாநில பொறுப்பாளா்கள் முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனா். செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT