செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்க்க, பெயா் நீக்கம் செய்ய, பெயா் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவா்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
மேலும் வாக்காளா்கள் நேரடியாகவும், இந்திய தோ்தல் ஆணையத்தின் இணைய வழியாகவும் மற்றும் வோட்டா்ஸ் ஹெல்ப் லைன் என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் பூா்த்தி செய்தல். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேற்படி இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவா்கள் வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்க்க, பெயா் நீக்கம் செய்ய, பெயா் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளா் அடையாள அட்டை பெற விரும்புபவா்கள் இதற்கான விண்ணப்பங்களை 18.01.2026 (ஞாயிறு) வரை வட்டாட்சியா், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.
மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயா் சோ்க்க, பெயா் நீக்கம் செய்ய, பெயா் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவா்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியலானது வருகிற 17.02.2026 அன்று வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.