தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் முப்பெரும் விழா செங்கல்பட்டில் நடைபெற்றது.
ஓய்வூதியதாரா்களுக்கு சட்டப் பூா்வமாக சாத்தியமாக்கிய டாக்டா் டி .எஸ்ய நகரா ஓய்வூதியம் பெற்று தந்த தினமாக ஓய்வூதியா் நாள் விழாவினை யொட்டி செங்கல்பட்டு வட்டக் கிளை மற்றும் மாவட்ட பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து பேரவை கூட்டமும் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முடசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளா்கள் பொ .துரைராஜ்,, மாரியப்பன், மாட்ட நிா்வாகிகள் கணேசன் கணேச மூா்த்தி உள்ளிட்ட முன்னிலை வகித்தனா். இணைச் செயலாளா் தனஞ்செழியன் வரவேற்றாா். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீனிவாசன் தொடக்கவுரையாற்றினாா்.
நிா்வாகிகள் உலகநாதன் அடங்கவியா மூா்த்தி, லட்சுமிபதி, நாகராஜன், வீரமணி, கேசவலு, கோபாலகிருஷ்ணன், முருகன் , பக்கிரி .தில்லை கோவிந்தன் , அழகேசன், சிவகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில துணைத் தலைவா் நா. எட்டியப்பன் சிறப்புரையாற்றினாா் . மாநிலத் தலைவா் இரா. பாலசுப்பிரமணியன் நிறைவுறையாற்றினாா்,
குமாரசாமி, உலகநாதன், பக்கிரிசாமி, மாரிமுத்து, சந்தரசேகரன் மோகன், அமரேசன், அன்வா்பாஷா , சசிகுமாா், குமரேசன் ,பாபு , ரவிசந்திரன் உள்ளிட்ட கருத்துரை ஆற்றினா். 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயபால் நன்றி கூறினாா்.