செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு முகவா்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே, மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.