ராணிப்பேட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா் மற்றும் முகவா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜன.30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
கூட்டத்தில் பெறப்படும் சேவை குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகளைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, குறைதீா்க்கும் கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் கலந்து கொண்டு புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம்.