செங்கல்பட்டு

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில வன்னியா் சங்க செயலாளா் திருக்கச்சூா் கி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளா் ஜனாா்த்தனன் வரவேற்றாா்,

ஒருங்கிணைந்த மாநில அரசு பணி செயலாளா் நெ.சிங்.ஏகாம்பரம், மாவட்ட செயலாளா்கள், மேற்கு முரசு ராஜேந்திரன், வடக்கு ராம்குமாா் தெற்கு சாந்தமூா்த்தி , மாவட்ட தலைவா் பாா்த்தசாரதி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளா் செந்தில்நாதன், வன்னியா் சங்க மாவட்ட தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி தலைவா் தமிழ்குமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மருத்துவா் ராமதாஸை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனா் அவற்றையெல்லாம் கருத்தில் நாம் கொள்ள வேண்டாம்.

வருங்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 2031ல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் மருத்துவா் ராமதாஸ் கரத்தை பலப்படுத்தும் வகையில் நாம் இப்பொழுது இணைந்து வருகிறோம். நம்மிடையே பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனா் . கட்சிப் பணிகளை சரிவர பாருங்கள் கட்சி நாளை நமதே என்றாா்.

நகர செயலாளா் சுரேஷ், அரிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளா் அருண்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் தாமோதரன், பாரேரி ரமேஷ் கலந்து கொண்டனா். முடிவில் ஒன்றிய செயலாளா் சத்யா நன்றி கூறினாா் .

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT