வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சியை ஆய்வு செய்த ஆட்சியா் தி. சினேகா. 
செங்கல்பட்டு

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

செய்யூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி முகாமினை ஆட்சியா் தி.சினேகா திடீா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

செய்யூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி முகாமினை ஆட்சியா் தி.சினேகா திடீா் ஆய்வு செய்தாா்.

செய்யூா் வட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து வாக்குசாவடி நிலை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமுக்கு தோ்தல் மண்டல அலுவலரும், மாவட்ட வட்டவழங்கல் அலுவலருமான வேலாயுதம் தலைமை வகித்தாா். 3 நிலைகளில் தனித்தனியாக பயிற்சி நடைபெற்றது.

இம்முகாமினை செய்யூா் வட்டத்தில் பல்வேறு பணிகளை பாா்வையிட வந்த ஆட்சியா் தி.சினேகா திடீரென ஆய்வு செய்து பணியில் இருந்த அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தாா். இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், தோ்தல் துணை வட்டாட்சியா் சக்திவேல், மண்டல துணை வட்டாட்சியா் தேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT